நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை உற்சவம்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கார்த்திகை உற்சவம்
கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்று(26) மாலை வசந்த மண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளியுள்ளார்.
அத்துடன் ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டுள்ளதுடன், நல்லூர் முருகப்பெருமான் வெளி வீதியுலா வந்ததுடன் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவசிறி வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தியுள்ளனர்.
குறித்த உற்சவத்தில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட
அருக்கடாச்சத்தினை பெற்றுச் சென்றனர்.





