முல்லைத்தீவு - மணலாறு ஜீவன் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமான நினைவேந்தல்
முல்லைத்தீவு - மணலாறு ஜீவன் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வுகள் நேற்று(27.11.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழீழத்தின் இதயபூமி மணலாற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஜீவன் மாவீரர் துயிலுமில்லத்தில் இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், செம்மலை மாவீர்நாள் ஏற்பாட்டுக்குழுவினரால் உணர்வு பூர்வமாக எழுச்சியாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
நினைவு தினம் அனுஷ்டிப்பு
பொதுச்சுடரினை சோதியா படையணி சிறப்பு தளபதி மாவீரர் மதுரம் சகோதரன் வ.சுயந்தன் ஏற்றி வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.


