விசுவமடு புத்தடி பகுதியில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கான முன்னேற்பாடு
மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23.11.2025 அன்று இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு நேற்றையதினம்(09.11.2025) மாலை விசுவமடு கிழக்கு புத்தடி பகுதியில் நிகழ்வுக்கான முன்னேற்பாடாக சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
விசுவமடு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர் உரித்துடையோருக்கான இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் வழமையாக நடைபெற்று வரும் மதிப்பளிப்பு நிகழ்வாகும்.
அதேபோன்று இவ்வருடமும் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்றைய சிரமதான பணிகள் விசுவமடு கிழக்கு, மேற்கு பிரதேச மாவீரர் பெற்றோர் பணிக்குழுவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே. கரிகாலன், மாவீரர்களின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பங்களித்திருந்தனர்.







