மாவீரர் தின நினைவேந்தல் : பாதுகாப்பு தரப்பினருக்கு அநுர அரசாங்கத்தின் அறிவுறுத்தல்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கத்தின், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என்வும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எவ்வித கெடுபிடிகளும் இன்றி அனுஷ்டிக்கலாம்..
அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,
மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்கும் மக்களை ஒளிப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது என்று குறிப்பிட்டார்.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
