கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் (PHOTOS)
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்களில் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள விசேட அதிரடி படையினர் தொடர்ச்சியான பல தடைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன் தலைமையில்
உணர்வெழுச்சியுடள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.













பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri