வவுனியா - ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி
வவுனியா- ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வு பெருந்திரளான மக்கள் திரட்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அதற்கு அருகாமையில் அமைந்துள்ள பகுதியில் தொடர்ச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குறித்த பகுதி மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் படங்கள் மற்றும் வவுனியா மாவட்ட மாவீரர்களின் பெயர்கள் என்பன அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
அஞ்சலி
இன்றைய நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

பிரதான பொதுச்சுடரினை மாலை 6.07 இற்கு மூன்று மாவீரர்களின் தாயார் ஒருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, ஏனைய உறவுகள் மற்றும் பொதுமக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டிய பகுதிகள் உட்பட வவுனியாவகன் பல பகுதிகளும் சிவப்பு - மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri