தமிழ் மக்களுக்கான அரசியல் கௌரவத்தை யாரும் வழங்க மாட்டார்கள் - அருட்தந்தை மா.சத்திவேல்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka
By Shan Oct 05, 2024 07:32 AM GMT
Report

அரசியல் கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களுக்கான அரசியல் கௌரவத்தை யாரும் வழங்க மாட்டார்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (05.10.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், 

இலங்கையின் தெற்கு அரசியலில் மாற்றம் என்பது தற்போது கவர்ச்சி அரசியலாகி மக்கள் மயப்படுத்தபட்டு வருகின்றது. இது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மேலும் கவர்ச்சியாகலாம்.

108 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலம் சென்ற முக்கிய அறிவிப்பு

108 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலம் சென்ற முக்கிய அறிவிப்பு

வாக்கு கொள்ளை

இந்த அரசியல் கலாச்சாரத்திற்குள் வடக்கு கிழக்கின் புத்தி ஜீவிகளாகவும், கல்வியாளர்களாகவும் கருதப்படுவோரும் இழுத்துச் செல்லப்படும் அபாயமும் நிலவுகின்றது.

அதேபோல் தாயகத்தில் பாரம்பரிய கட்சிகளாகவும், ஈழப் போராட்டத்தில் முனைப்போடு செயற்பட்டவர்களாகவும் (காட்டிக் கொடுத்தவர்கள்) வீர வசனம் பேசுபவரும் வாக்கு கொள்ளைக்காக கூட்டு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் தமிழர் தேசியத்தை முள் வேலிக்குள் தள்ளி கொலை செய்ய எடுக்கும் முயற்சியை வருடந்தோறும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்ற ஒழுங்குகள் செய்வோரும், சுடர் ஏற்றுவோரும் தகர்த்தெறிய வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் கௌரவத்தை யாரும் வழங்க மாட்டார்கள் - அருட்தந்தை மா.சத்திவேல் | M Shakthivel Criticized Government

தற்போதைய நாட்டின் ஜனாதிபதியான அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை தமதாக்க இறுதியாக யாழ்ப்பாணம் வந்தபோது, மாற்றத்தை தேடும் தென்பகுதி மக்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்றே அழைப்பு விடுத்து வாக்கு கேட்டார்.

வடக்கு கிழக்கு தமிழர்கள் தேசத்தில் அவர்கள் நடத்திய யுத்தம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், காணாமலாக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தினர், தொல்லியல் திணைக்கத்தினர், சிங்கள பௌத்த துறவிகள் ஆகியோரால் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மக்கள் எதிர்பார்க்கும் நீதி, அரசியல் பிரச்சனைக்கான தீர்வு எதையும் குறிப்பிடவில்லை.

ஜனாதிபதியின் மாற்றம் என்பது தமிழர்கள் வாழ்வோடு தொடர்புபட்டதல்ல. அது முழுக்க முழுக்க தனது அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்துவதற்கான அரசியல் என்பதனை நாம் ஆழமாக சிந்திப்போம்.

இனப் பிரச்சனைக்கான தீர்வு

இதற்குள் சிக்கிவிட வேண்டாம் என தமிழர் தாயக மக்களை கேட்டுக் கொள்கின்றோம். இடதுசாரி சிந்தனை உடைய மக்கள் விடுதலை முன்னணியினர் வடக்கு கிழக்கு மக்கள், மலையக மக்கள் என்போர் அரச அதிகார தரப்பாலும் அரச இயந்திரத்தினராலும் பொருளாதார, சமூக அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் போது அவர்களை தங்கள் வர்க்கமாக ஏற்று அவர்களோடு சேர்ந்து பயணிக்கவில்லை.

தமது அரசியலின் எதிரியாகவே அவர்களைப் பார்த்தார்கள். ஆட்சியாளர் சேர்ந்து ஒடுக்குமுறைக்கும் இன அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் துணை நின்றது அவர்கள் வரலாறு. இதனால் தான் யாழ்ப்பாணத்தில் அவருடைய மேடையில் தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வாய் திறக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தமிழ் அச்சு ஊடகம் ஒன்றுக்கு தற்போதைய பிரதமர் வழங்கி உள்ள செவ்வியில், இன பிரச்சனைக்கு ஒரு நிலைக்குள் இருந்து கொண்டு மாத்திரம் தீர்வு காண முடியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் புதிய சட்டம் உருவாக்குதல் ஊடாகவே தீர்வு காணலாம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் கௌரவத்தை யாரும் வழங்க மாட்டார்கள் - அருட்தந்தை மா.சத்திவேல் | M Shakthivel Criticized Government   

அத்துடன், அரசாங்கம் செயற்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கம் தம்மையும் பிரதிநிதித்துவப்படுகிறது என்பதை உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான வகையில், அரசாங்கம் செயப்பட வேண்டும்" எனக் கூறியிருக்கின்றார்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இனப் பிரச்சனைக்கான தீர்வு யாப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் அது மக்கள் தீர்ப்புக்கு விடப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை சிங்கள பௌத்தர்களிடம் அரசியல் தீர்வினை விட்டு விடுவோம் என்பதாகவே நாம் பொருள் கொள்ளல் வேண்டும்.

அது மட்டுமல்ல. அமைச்சரவை தீர்மானங்களை அமைச்சர் விஜித ஹரத் அறிவித்த போது "அரசியல் கைதிகள் நாட்டின் சட்டம் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள்" எனக்கூறினார். இதுவரை காலமும் அவ்வாறே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்களுடைய சட்டம் காரணமாக பலர் 25 வருட காலமாக சிறை கம்பிகளுக்குள் அடைப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இயக்கம் 

இந்த சட்டத்தின் மூலம் தான் தீர்வு காண்போம் என்பதன் மூலம் அரசியல் தீர்மானம் எடுத்து அவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறுவதாகவே உள்ளது. அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும்.

அதற்கு இவர்கள் எள்ளளவும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம். இந்நிலையில் ஒரு சில தமிழ் அரசியல் கட்சி தலைமைகள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது ஆதரவு கரத்தை நீட்டுவதாக அடையாளம் காட்டி சந்திப்புகளை செய்துள்ளனர்.

மேலும் சிலர் தமிழர் தேசியத்தின் முகம் காட்டி ஆட்சி கதிரைகளை தமதாக்கியும் ஆதரவு கொடுக்க முயல்கின்றனர். இன்னும் சிலர் மேற்கூறியர்கள் எல்லாம் தோற்கடித்து நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவினை கொடுக்க துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தமிழர்களை சிதைக்க சுயேட்சையாகவும் களமிறங்க ஆயத்தமாய் உள்ளனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் கௌரவத்தை யாரும் வழங்க மாட்டார்கள் - அருட்தந்தை மா.சத்திவேல் | M Shakthivel Criticized Government

இவர்கள் விட்டில் பூச்சிகள் மட்டுமல்ல. இவர்கள் இனப்படுகொலையாளர்கள். தனது அரசியல் நலன் கருதி இந்தியாவும் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. இவர்களுடைய நோக்கம் தமிழர் தேசியத்தையும் அது தொடர்பாக தெளிவோடு விட்டுக் கொடுக்காது பேசுகின்றவர்களையும் அரசியல் சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே.

இதற்கும் இடமளிக்க கூடாது. அரசியல் பன்முகம் கொண்ட இராவண கூட்டம் தமிழர் தேசியத்தை சிதைத்தழிக்க அணிவகுத்து நிற்கையில் விட்டில் பூச்சிகளாக தமிழர்கள் அதில் விழுந்து விடக்கூடாது. தேசிய அரசியல் முகமூடி கொள்ளையர்களிடம் தப்பித்தால் மட்டுமே எமது அரசியல் கௌரவத்தை தற்காத்துக் கொள்ளலாம்.

இல்லையேல் இனமாக எழ முடியாத சூழல் ஏற்படும். இதுவே பலரது நோக்கம். அதனை தோல்வியுறச் செய்வோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் நாம் எழுந்தோம் என்பதை நினைவில் கொள்வோம். அதுவே எமது சக்தி - என்றுள்ளது.

மைத்திரி வீட்டிற்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பெண்

மைத்திரி வீட்டிற்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பெண்

முன்னாள் அரசியல் தலைமைகளின் சுகபோக வாழ்க்கையை அம்பலப்படுத்த தயாராகும் அநுர தரப்பு

முன்னாள் அரசியல் தலைமைகளின் சுகபோக வாழ்க்கையை அம்பலப்படுத்த தயாராகும் அநுர தரப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US