மறைமுக கொலை அச்சுறுத்தல்: அருட்தந்தை மா.சத்திவேல் காட்டம்
படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்காத நிலையில், அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது கொலை அச்சுறுத்தலே என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று(23.04.2025) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைக்க நினைப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே மதவாதமே.

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா
அரசியல் வஞ்சக நோக்கம்
தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை, பேரினவாத அரசியலின் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே.
அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி, பண்டாரநாயக்க, ஜெயவர்தன, சந்திரிகா, ராஜபக்ச வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி, வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும்.
பகிரங்க கொலை அச்சுறுத்தல்
தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை.
அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
