பொருளாதார சிக்கல் -மஹிந்தவின் துபாய் பயணம் திடீர் ரத்து!
துபாய் செல்லும் பயணத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ரத்துச்செய்துள்ளார்.
உள்நாட்டு பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலேயே இந்த பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நடைபெறும் “எக்ஸ்போ” நிகழ்வில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 3ஆம் திகதியன்று மஹிந்த ராஜபக்ச அங்கு செல்லவிருந்தார்.
எனினும் பிரதமர் தமது பயணத்தை ரத்துச்செய்துள்ளதாக பிரதமரின் தலைமையதிகாரி யோசித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இலங்கையின் டொலர் பெறுமதி 3 பில்லியன்களாக உயர்ந்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த வருடத்தில் இயல்புக்கு கொண்டு வரும் வகையில் பிரதமரின் பயணம் அமையவிருந்த போதும், உள்நாட்டு நிலைமை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யோசித்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் டொலர் பிரச்சினை நிலவுகின்ற நிலையில் அரசாங்க மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



