பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு
விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் நாவலாவின் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருட தொடக்கத்தில் கூரியர் சேவை நிறுவனமொன்றுக்கு 5 கிலோ கொக்கெய்ன் மற்றும் 500 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர், பொலிஸாரைத் தவிர்த்து நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் வீட்டிலிருந்து தலைமறைவு
குறித்த சந்தேகநபர் நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதணையில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார் ஒன்றும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
பிரம்மாண்டத்தின் உச்சம் வாரணாசி படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலி வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா Cineulagam