காத்தான்குடி பிரதான வீதியில் அதி சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்து
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேருந்து கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்று லொறியுடன் மோதி பின்னர் முச்சகரவண்டியுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து
லொறி பிரதான வீதியின் சாலை ஓரமாக உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்துவதற்காக வீதி ஓரமாக நிறுத்த முற்பட்டபோது பேருந்து வேகக் கட்டுப்பாட்டினை இழந்து லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டி மற்றும், அதி சொகுசு பேரூந்தின் முன் பகுதி பாரிய சேதத்துக்குள்ளானதுடன் லொறியின் பின் பகுதியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படாத நிலையில் பேரூந்தின் சாரதி நடத்துனர், மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri