சிகிச்சை நிலையங்களில் நிரம்பி வழியும் கோவிட் தொற்றாளர்கள் - ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு
நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெருமளவானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன் சிக்கல் நிலைமை அதிகமாகக் காணப்படுபவர்களாகவும் உள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களை விட தற்போது இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களில் பெருமளவான அறிகுறிகள் தென்படுவதோடு, அவர்கள் சிக்கல் நிலைமை அதிகமுடையவர்களாகவும் உள்ளனர்.
குறிப்பாக பெருமளவானோர் ஒட்சிசன் தேவையுடையோகவுள்ளனர். தொற்றாளர்களை அனுமதித்து சிகிச்சையளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த பெருமளவான சிகிச்சை நிலையங்கள் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,