கொத்து, பால் தேநீர் உள்ளிட்ட ஹோட்டல் உணவுகளின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் ஹோட்டல் உணவு வகைகளின் விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு, கோதுமை மா, பால் மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒன்றியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உணவுப் பொதி (lunch packet), ப்ரைட் றைஸ் (fried rice), கொத்து (kottu), பால் தேனீர் உள்ளிட்டனவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு நிகராக உணவுப் பொதிகளின் விலையை உயர்த்தினால் ஒரு பொதிக்கான விலையை 30 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை உயர்வினால் இவ்வாறு ஹோட்டல் உற்பத்தி உணவுகளின் விலை உயர்த்தப்படுவதாக ஒன்றியத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அரசாங்கத்தை விடவும் ஹோட்டல் உரிமையாளர்கள் மனிதாபிமானம் மிக்கவர்க்கள் என தெரிவித்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
