பசில் நாடாளுமன்றம் வரும் திகதியில் திடீர் மாற்றம் - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றம் வருவதற்கு தீர்மானித்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அந்த திகதியில் திடீர் மாற்றம் செய்துள்ளார்.
எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதனை உறுதி செய்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பசிலுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்யவுள்ளார்.
அதற்காக பலர் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,