சிசுக்கொலை வழக்கில் சிக்கிய லூசி லெட்பி: இறுதி தீர்ப்பை வழங்கியது பிரித்தானிய நீதிமன்றம்(Video)
பிரித்தானிய வைத்தியசாலையொன்றில் புதிதாகப் பிறந்த 07 சிசுக்களை கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக கைதாகிய பிரித்தானிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
33 வயதான லூசி லெட்பி எனும் குறித்த பெண், 2015 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 5 குழந்தைகளையும் 2016 ஜூன் மாதம் மேலும் இரு குழந்தைகளையும் பல்வேறு முறைகளில் கொலை செய்தார் எனவும் மேலும் 6 குழந்தைகளை கொல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
ஊசி மூலம் காற்றை செலுத்தியும், பலவந்தமாக பால் கொடுத்தும், இன்சுலின் மூலம் நஞ்சூட்டியும் வேண்டுமென்றே அவர் குழந்தைகளை கொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரித்தானியாவின் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து லூசி லெட்பிக்கு ஆயுள்தண்டனை விடுதிக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை ஆராய்ந்து ஒரே பார்வையின் கீழ் கொண்டுவருகிறது இன்றைய செய்திவீச்சு.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
