LankaQR வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - வங்கிக் கணக்கிற்கு வரப்போகும் பணப்பரிசு
வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் LankaQR ஊடான பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் தேசிய அளவிலான திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 6 மாதங்களில் 6000க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு மொத்தம் 51 மில்லியன் பணப் பரிசு இதன் மூலம் வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில் 2026 செப்டம்பர் 1, முதல் 2027 பெப்ரவரி 28 வரை மேற்கொள்ளப்படும் அனைத்து LankaQR பரிமாற்றங்களும் இந்த அதிஷ்ட குலுக்கலுக்கு தகுதிபெறும். தனியாகப் பதிவு செய்யத் தேவையில்லை.
பரிசுகள் விபரம்
ஒவ்வொரு வாரமும் 125 வாடிக்கையாளர்கள் மற்றும் 125 வணிகர்கள் உட்பட மொத்தம் 250 வெற்றியாளர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்படும்.

அத்துடன், மாதாந்தம் 3 வாடிக்கையாளர்கள் மற்றும் 3 வணிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா இருவருக்கு முறையே 1 மில்லியன், 500,000 மற்றும் 250,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதல் குலுக்கல் அக்டோபர் 27 அன்று தொடங்குவதுடன், பரிசுகள் நேரடியாக வெற்றியாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு