டிரம்பின் அறிவிப்பை மறுத்து அதிரடி காட்டிய ஈரான்! இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறும் எரிபொருள் விலை
சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் விலையானது மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய சந்தைகளில் இன்று (24.0.2026) காலை நிலவரப்படி, மசகு எண்ணெய் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 103.69 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, நைமெக்ஸ் லைட் ஸ்வீட் மசகு எண்ணெய் விலை 3.42 சதவீதம் அதிகரித்து 91.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
விலைகள் பெரும் வீழ்ச்சி
இதேநேரம் ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டிருந்தன.
அதன்படி, அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் மசகு எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியிருந்தது.

இதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 7.16% சரிவடைந்து, 104.43 அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது.
WTI ரக மசகு எண்ணெய் விலை 7.59% என்ற பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து, ஒரு பீப்பாய் 90.77 அமெரிக்க டொலராகக் குறைந்திருந்தது.
எச்சரிக்கையுடன் செயற்படும் முதலீட்டாளர்கள்
விரைவில் சமாதான ஒப்பந்தம் எட்டப்படலாம் என தெரிவித்தமையால் நேற்று பிரென்ட் விலை 10 சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது.
ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய தகவலை தெஹ்ரான் மறுத்துள்ளதால், முதலீட்டாளர்கள் மீண்டும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதால் விலைகள் மீள அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri