விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாட்டில் ஒரு பகுதியை வழங்கியிருந்தால் இன்றைய இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தைப் போலத்தான் இலங்கைக்கும் நடந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் முழு பாலஸ்தீனத்தையும் உலக வரைப்படத்தில் இருந்து நீக்குவதற்கு முயற்சிக்கின்றனர். மேற்குலக நாடுகள் ஹமாஸை தோற்கடிப்பது போன்ற விடயங்களையே கதைக்கின்றனர்.
இலங்கைக்கும் இந்த நிலை நேர்ந்திருக்கும்
ஆனால் அங்கே பாலஸ்தீனர்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்துவதில்லை. இஸ்ரேல் - அமெரிக்க இராணுவத்தின் வெற்றிகள் தொடர்பிலேயே கதைக்கின்றனர்.
அன்று புட்டினுக்கு எதிராக யுத்தம் செய்ய பயந்தவர்கள் இப்போது ஹமாஸுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா வருகின்றது.
பிக்குகள் உள்ளிட்ட குழுக்கள் ஐ.நாவுக்கு சென்று இஸ்ரேலுக்காக கதைக்கின்றனர். இவர்கள் வெட்கப்பட வேண்டும்.
இவ்வாறு பிரபாகரனுக்காகவும் கதைத்து அவருக்கும் 1947இல் வழங்கியதை போன்று நாட்டில் ஒருபகுதியை வழங்கியிருந்தால் இப்படிதான் இலங்கைக்கும் நடந்திருக்கும்.
நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலஸ்தீனத்திற்கு சென்றிருந்தோம். அங்கே இஸ்ரேல் படையினரே இருக்கின்றனர். அங்கு கடும் நெருக்கடிக்குள்ளேயே மக்கள் இருந்தனர். அவர்களுக்கு விடுதலை வேண்டும் அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
you may like this video

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
