விடுதலைப் புலிகளின் தலைவர் நேர்மையானவர் : அருட்தந்தை மா.சத்திவேல்

Kamal Gunaratne Sri Lanka Sri Lankan political crisis
By Shan Dec 09, 2023 10:24 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நேர்மையானவர் அவரின் அரசியல் நீதி நேர்மையானது என்பதை தமிழர்கள் எப்போதோ கண்டு கொண்டதால் தான் அவருக்கு பின்னால் மக்கள் அணிதிரண்டனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (09.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

மதுபானசாலைகளை திறக்கும் நேரம் தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு

மதுபானசாலைகளை திறக்கும் நேரம் தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு

இறுதிவரை போராடிய ஒரு தலைவர்

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பிரபாகரன் நேர்மையான ஒரு தலைவர். இறுதிவரை போராடிய ஒரு தலைவர்"என அண்மையில் நற்சான்று கொடுத்திருக்கின்றார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன. இக்கூற்று தாம் தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்களின் கடந்த கால வாழ்வை பார்த்து வெட்கிய நிலையில் அவரின் உள்ளத்தில் இருந்து எழுந்ததாயின் வரவேற்கிறோம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் நேர்மையானவர் : அருட்தந்தை மா.சத்திவேல் | Ltte Leader Tamils Rallied Reverend M Satthivel

இத்தகைய நேர்மையாளர் ஒருவரை கொல்வதற்கும் அவரை கொல்வதற்கென இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்வதற்கும் ஏன் சர்வதேச நாடுகளை அழைத்து வந்தீர்கள்? என்று நாம் கேட்கின்றோம். அதற்கு நீதி வழங்கவும் மறுக்கிறீர்கள். இதற்கு மன்னிப்பு கேட்க முடியுமா? அவ்வாறு கேட்டு இருந்தால் அதுவே மனசாட்சி இதற்கு உங்கள் மனது இடம் கொடுக்கவில்லையெனில் அது இனவாதம்.

பிரபாகரன் நேர்மையாளர் எனக் கூறிய கமல் குணரத்தின அவர்கள் அவரது கொள்கை எனக்கு பிடிக்கவில்லை எனும் கூறுகிறார். கொள்கை பிடிக்கவில்லை என்பதற்காக அவரையும், அவருக்கு பின்னால் இருந்தவர்களையும், பொதுமக்களையும் படுகொலை செய்த வருடம் தோறும் விழா எடுக்கின்றீர்கள் இதுதான் உங்கள் கொள்கையா? உங்கள் தலைவர்களில் மூவரினதும் அவர்களது சகாக்களினதும் பிழையான பொருளாதார கொள்கை திட்டமிடலால் நாடு வறுமைக்குள் என உயர் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியது.

இதனாலா மரணத்தை நோக்கி மக்கள் பயணித்து கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அவர்களை கொலை செய்தீர்களா அவர்களுக்கு இன்றும் ஜெயவேவா கோசம் எழுப்பி கொண்டிருப்பவர்களை கொலை செய்வீர்களா? ஆனால் எத்தனை இலட்சம் தமிழர்களை கொலை செய்தீர்கள்.இதுவா உங்கள் சட்டம்? இதுவா உங்கள் பௌத்த தர்மம்?

விடுதலைப் புலிகளின் தலைவர் நேர்மையானவர் : அருட்தந்தை மா.சத்திவேல் | Ltte Leader Tamils Rallied Reverend M Satthivel

பிரபாகரன் நேர்மையாளர். அவரின் அரசியல் நீதி நேர்மையானது என்பதை தமிழர்கள் எப்போதோ கண்டு கொண்டதால் தான் அவருக்கு பின்னால் மக்கள் அணிதிரண்டனர். அவருடைய கொள்கையை நேரடியாக ஏற்றுக்கொண்டவர்கள் அக் கொள்கையை நிலைநாட்ட உயிர் கொடையானார்கள்.

பயங்கரவாத தடை சட்டம்

இவர்களை எல்லாம் "பயங்கரவாதிகள்" எனக் கூறுவது என்ன நியாயம் ?அது மட்டுமா நீங்கள் நேர்மையாளர் எனக் கூறியவரின் பிறந்தநாளை கொண்டாட முடியாது. அவரின் கொள்கைகளுக்கு பின்னால் நின்றவர்களை நினைவு கூற முடியாது. இதற்கு பயங்கரவாத தடை சட்டத்தை பாவிக்கின்றீர்கள். கைது செய்து சிறையில் அடைகின்றீர்கள். தண்டனை கொடுக்க முயற்சி எடுக்கின்றீர்கள். இதில் என்ன நீதி நியாயம் உள்ளது ?

தமிழர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொண்டவரின் நேர்மையை காலம் தாழ்த்தி நீங்கள் உணந்திருந்தாலும் நேர்மையான சிங்கள அரசியல் முற்போக்காளர்களுக்கும் தமிழர்களோடு உறவு கொண்டுள்ள சாதாரண சிங்கள மக்களுக்கும் இது தெரியும். அந்த வழியில் நீங்களும் நிற்பது உண்மை என்றால் உங்கள் அரசியல்வாதிகளுக்கு கூறுங்கள்.

வற் வரி விதிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்! பாதிக்கப்படும் தரப்பினர் தொடர்பில் வெளியான தகவல்

வற் வரி விதிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்! பாதிக்கப்படும் தரப்பினர் தொடர்பில் வெளியான தகவல்


குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறுங்கள். பௌத்த சாஸன அமைச்சை கையில் வைத்திருப்பவருக்கும் கூறுங்கள். தொல்பொருள் திணைகளத்தினருக்கும் விசேடமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவுக்கு கூறுங்கள். இதுவே நியாயம்.

மேதகு பிரபாகரன் அவர்களின் கொள்கையும், அரசியல் நீதியும், அதனை அடைவதற்கான செயற்பாடுகளும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஏன் முழு நாட்டுக்குமே பாதுகாப்பாக இருந்தது. அதனை நடைமுறைப்படுத்த சிங்கள தலைவர்களுக்கு பேரினவாதம் இடம் கொடுக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் நேர்மையானவர் : அருட்தந்தை மா.சத்திவேல் | Ltte Leader Tamils Rallied Reverend M Satthivel

அதனை அழிப்பதாக பாரிய இனப்படுகொலை செய்து ஆயுத யுத்தம் முடிவுற்றதாக நீங்கள் கூறினாலும் தமிழர் பிரதேசத்தில் வேறு வடிவில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. இதனை நீங்களும் அறிவீர்கள். இது ஏன்?

நீங்கள் நேர்மையாளர் எனக் கூறியவரின் அரசியலை ஏற்றுக் கொண்டிருந்தால் நாடு வறுமைக்குள் சென்றிருக்காது. புத்திஜீவிகள்,தொழில் வல்லுனர்கள் நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருக்க மாட்டார்கள். கடனில் நாடு மூழ்கி இருக்காது. அன்னிய ஆதிக்க சக்திகள் வல்லரசுகள் நாட்டில் காலடி வைத்திருக்காது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் அன்னிய சக்திகள் எவ்வளவு வேகமாக நாட்டுக்குள் காலடி வைத்துள்ளனர் என்பதை பேரினவாத சிங்கள மக்களை சிந்திக்க வையுங்கள். அதுவே நாட்டை பாதுகாக்கும்.

தென்னிலங்கையில் கடத்தப்பட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு

தென்னிலங்கையில் கடத்தப்பட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரபாகரன் நேர்மையாளர் என்பது அவரது வாழ்வையும்,கொள்கை பிடிப்பையும் அதற்கான அவரது அர்ப்பணிப்பையுமே குறிக்கும்.

இந்த நிலையில் என்றாலும் நீதிக்காக சர்வதேசத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதிக்கு வழிவகுங்கள். அதற்கு உங்களைப் போன்றவர்களோடு சேர்ந்து குரல் கொடுங்கள். தமிழர்களுக்களுடனான உறவை பலப்படுத்துங்கள்.அதுவே நாட்டுக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் சுகம் கொடுக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் நேர்மையானவர் : அருட்தந்தை மா.சத்திவேல் | Ltte Leader Tamils Rallied Reverend M Satthivel

காலம் தாழ்த்தி எண்ணி அரசின் உயர்மட்ட பதவி வைக்கும் ஒருவரின் வாயிலிருந்து நல்ல செய்தி வெளிவந்துள்ளது. உண்மையை வெளிவர நீண்ட காலம் எடுக்கும் என்பது உண்மையை அதற்காக அரசியல் ராஜதந்திரத்தோடு தமிழ் தலைமைகள் தமது குடுமிபிடி சண்டையை கைவிட்டு, அடிவருடி அரசியல் செய்யாது, தமிழர்களின் தேசியம் காக்க அரசியல் நாகரீகத்தோடு கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். அது ஒரு நீண்ட பயணம். அதுவே தமிழர்களின் தாகத்தை தீர்க்கும்” என கூறியுள்ளார்.

இலங்கையின் பல வருட கோரிக்கைக்கு கிடைத்துள்ள சாதகமான பதில்

இலங்கையின் பல வருட கோரிக்கைக்கு கிடைத்துள்ள சாதகமான பதில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US