விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உயிரோடு! நெடுமாறனின் தகவலால் ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
ராஜபக்சக்களின் அரசியல் முதலீடு என்பது யுத்த வெற்றியாகும், ஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் வீழ்ச்சியடைந்திருக்காவிட்டால் தென் பகுதியில் ராஜபக்சக்கள் எழுச்சிக்கண்டிருக்க முடியாது என திருகோணமலை மூலோபாயக் கற்கைகளுக்கான பணிப்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று வெளியாகியுள்ள தகவல் நாட்டுக்கு மீண்டும் ராஜபக்சக்கள் தான் தேவைப்படுகின்றார்கள் என்ற நிலைப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் எழலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றின் டிஜிட்டல் பிரிவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ராஜபக்சக்களின் செல்வாக்கை தீர்மானிக்கும் களம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உண்மையில் இலங்கை தீவு ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது, அதன் மூலம் ஒரு அரசியல் நெருக்கடி நிலையும் உருவாகியிருக்கக்கூடிய நிலையில் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒன்றும் நடத்தப்பட தயார் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த தேர்தல் ராஜபக்சக்களின் செல்வாக்கை அளவிடுகின்ற ஒரு தேர்தல் களமாக இருக்கும்.
இவ்வாறான சூழலில், உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து தெரிவித்திருக்கும் கருத்து எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கேள்வி இயல்பானது.
குறிப்பாக, தென்னிலங்கையில் ஒரு பாரிய அரசியல் நெருக்கடி இருக்கின்ற நிலையில், அதேவேளை, ராஜபக்சக்கள் மீண்டும் எழுச்சிப்பெறக் கூடுமா, இல்லையா என்ற சூழலில் இந்த மாதிரியான கருத்துக்கள் இலங்கை அரசியலில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்ற கேள்வி இருக்கின்றது.
ஏனென்றால் ராஜபக்சக்களின் அரசியல் முதலீடு என்பது யுத்த வெற்றியாகும். உண்மையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இல்லாவிட்டால் ராஜபக்சக்களின் எழுச்சி தென்பகுதியில் சாத்தியமில்லாத ஒன்று.
இந்த எழுச்சி மையப்புள்ளியாக இருப்பது, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி, அந்த வீழ்ச்சியின் அடிப்படையாக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தி.
ஆகவே அவர் உயிரோடு இருக்கின்றார், விரைவில் தென்படுவார் என்று கூறுவது தென்பகுதியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமா, அல்லது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி தற்போது எழுகின்றது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த கருத்து சிலவேளைகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு பயன்படக் கூடும்.
ஆனால் பிரபாகரன் உயிரோடு இருந்தால் தமிழ் மக்கள் சந்தோஷப்படுவார்கள். 13 வருடங்களாக தமிழ் மக்கள் மத்தியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உரையாடலுக்கு வராத விடயம் தற்போது வருவது தமிழ் தேசிய அரசியல் பரப்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என குறிப்பிட்டார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
