விடுதலைப் புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது..! இலங்கை இராணுவத்தின் பகிரங்க அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.
உயிரிழப்பிற்கான ஆதாரம்
இது தொடர்பில் அவர் பிபிசிக்கு கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எம் வசம் உள்ளன. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.
மரபணு பரிசோதனை ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார். குறித்த திகதியில் பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான மரபணு பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். தவறான தகவல்களை அவர்களை வெளியிடுகின்றார்கள்.
இந்தக் கூற்று எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
