பெண் போராளிகள் விடயத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை வியப்பாக பார்த்த கமல் குணரத்ன (Video)
கர்ப்பிணியான ஒரு சிங்கள பெண்ணின் வேண்டுகோளை கருத்திற் கொண்டு விடுதலைப் புலிகளிடம் சிக்கிய அவரது கணவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலை செய்தார் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் நடைபெறும் சிறுவர் வன்முறைகள் நாட்டுக்கு பாரதூரமான விடயமாக காணப்படுகின்றது. ஒரு நாட்டினுடைய சொத்துக்களாக இளையவர்கள் பார்க்கப்படுகின்றனர்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது கூட, தமிழீழ தேசியத் தலைமை, இளையவர்கள் தான் எமது நாட்டினுடைய சொத்து என்பதை தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள்.
ஆனால் இவை அனைத்திற்கும் மாறான சூழ்நிலை இப்போது காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,