காலி முகத்திடலில் நினைவுக்கூரப்பட்ட விடுதலைப் புலிகள்! சர்வதேச புலனாய்வு பிரிவினரிடம் தகவல் பெறும் பாதுகாப்பு தரப்பு
போராட்டங்களின் போது காலிமுகத்திடலில் விடுதலைப் புலிகளை நினைவுகூர நடவடிக்கை எடுக்கப்பட்டதை நாம் பார்த்தோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த ஆறு சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மற்றும் 317 நபர்களின் மீதான தடையை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானத்தின் பின்னணியில் உள்ள நியாயம் குறித்த உங்கள் கருத்து என்ன? என கேட்கப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் அமைச்சர் பதில் வழங்குகையில்,
விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்ததை யாரும் அதை விமர்சிக்கவில்லை அல்லது ஊடகங்கள் கூட அதைப் பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சர்வதேச தமிழ் அமைப்புகளின் மீதான தடையை நீக்க பாதுகாப்புப் படையினர் சில வழிமுறைகளை பின்பற்றுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
சர்வதேச புலனாய்வு பிரவினரிடம் இருந்து தகவல்கள் பெறும் பாதுகாப்பு தரப்பினர்
பாதுகாப்புப் படையினர் எப்போதும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தகவல்களைப் பெற்று அதன்படி செயல்படுகின்றனர்.
உண்மையில், அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்காக சில பிரிவுகள் இந்தப் பிரச்சினையை முன்னிலைப்படுத்துகின்றன.
எவ்வாறாயினும், காலிமுகத்திடலில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் போது அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இந்தச் செயல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
