புதிய கணக்காய்வாளர் நாயகம்! வெளியானது இறுதி முடிவு
புதிய கணக்காய்வாளர் நாயகமாக மூத்த துணை கணக்காய்வாளர் நாயகமாக இருக்கும் திருமதி எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் நியமனம் இன்று (03) அங்கீகரிக்கப்பட்டது.
இன்று(3) நடைபெற்ற அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
புதிய கணக்காய்வாளர் நாயகம்
அதன்படி, திருமதி எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் பெயர் அரசியலமைப்பு சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகப் பதவி வெற்றிடமாக உள்ளது.
ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சபைக்கு பெயர்களை முன்மொழிந்த போதிலும், அரசியலமைப்புச் சபை அந்தப் பெயரை நிராகரித்துள்ளது.
இருப்பினும், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான புதிய பரிந்துரைகளை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சபை இது தொடர்பாக இறுதி முடிவு இன்று எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.