பொது வேட்பாளராக ரணிலை களமிறக்க வியூகம் : அனைத்துக் கட்சிகளுக்கும் வலைவீச்சு
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் தரப்பு பலதரப்பட்ட வியூகங்களை வகுத்து வருகின்றது என்று ரணில் தரப்பு வட்டாரத்தில் இருந்து அறிய முடிகின்றது.
இதற்காக விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து கட்சிகளுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது என்று அந்தத் தரப்பு கூறுகின்றது.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அன்றி பொது வேட்பாளராகவே நிறுத்தப்படுவார் என்று ரணில் தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.
அமைச்சுப் பதவிகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளர் ஒருவரைக் களமிறக்காது ரணிலையே இறக்கும் வகையில் மொட்டுக் கட்சிக்குள் இருந்து பிரசன்ன ரணதுங்க மற்றும் நிமால் லான்சா உள்ளிட்ட மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களும் சுதந்திர கட்சி தனித்து வேட்பாளரை நிறுத்தாமல் ரணிலுக்கே ஆதரவு வழங்கும் வகையில் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.
மேலும், ரணிலின் விசுவாசிகள் நாலா பக்கமும் சென்று அனைத்து கட்சிகளுக்கும் வலை வீசி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |