மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையில் மின்சார கட்டணத்தை 25 சதவீதத்தினால் குறைக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பனவற்றுக்கான விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இவ்வாறு கட்டணங்களை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார கட்டணம் அதிகரிப்பு காரணமாக நாட்டில் மின்சார பயன்பாடு சுமார் 20 சதவீதம் குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலன் கருதப்படுவதில்லை
உயர்தர பரீட்சை நடைபெற்ற காலத்தில் எட்டு கிகாவோட் மணித்தியாலங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தாம் அதனை 10 கிகாவோட் மணித்தியாலங்களாக அதிகரிக்குமாறு கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனினும் தற்பொழுது நாட்டில் 13 கிகாவோட் மணித்தியாலங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
35 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டிய மின்சார கட்டணத்தை அரசாங்கம் 65 சதவீதம் உயர்த்தியுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக மின்சார பயன்பாடு குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
