மேல் மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவு!
மேல் மாகாணத்தில் 5 , 11 மற்றும் 13ம் தர வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்ட பின்னர் பல முன்னணி பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் பாடசாலைகளில் நேற்று வகுப்புகளைத் தொடங்கிய தரங்களில் 60 வீதங்களுக்கும் அதிகமான மாணவர்கள் வருகை தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த வாரம் நிறைவு பெற்றிருந்தது. இதனையடுத்து நாட்டின் அனைத்து மாகாணங்களின் பாடசாலைகளும் இரண்டாம் கல்வி நடவடிக்கைகளுக்காக நேற்று திறக்கப்பட்டது.
இந்நிலையில், மேல் மாகாணத்தில் ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19ம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri