அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது – மதுபான உற்பத்தியாளர் சங்கம்
குறைந்த விலையில் மதுபானம் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை தற்போதைய வரி கட்டமைப்பின் கீழ் நிறைவேற்ற முடியாது என மதுபான உரிமம் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
உயர்த்தப்பட்டுள்ள மதுபான வரி, 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT), 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட வரிகள் காரணமாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது நடைமுறை சாத்தியமற்றது என தெரிவித்துள்ளது.
குறிப்பாக குறைந்த விலையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்ய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.

2024–2025 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட வரிகளை குறைத்தால் மட்டுமே மதுபான விலையை குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஒரு மதுபான போத்தலுக்கே அரசுக்கு ரூபாய் 2,500-ஐ மீறும் அளவில் வரிகளை மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ளதாக கூறியுள்ளது.
இதேவேளை, அண்மைய நாட்களில் நாட்டின் முன்னணி மதுபான நிறுவனங்களில் ஒன்றின் களஞ்சியங்களில் இருந்த ஒரு மதுபான போத்தல், ரூபாய் 2,220 என்ற விலையில் மதுபான விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அந்த போத்தல்கள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் முழுவதுமாக விற்றுத் தீர்ந்ததாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரிகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படாத வரையில், குறைந்த விலையில் மதுபான போத்தல்களை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்குவது ஒரு கனவாகவே இருக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மதுபான உரிமம் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam