நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு: மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு - வெளியாகியுள்ள தகவல்

Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Mayuri Feb 18, 2026 11:59 AM GMT
Report

தற்போது இலங்கைக்கு தெற்காக நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி குறிப்பாக மாலைதீவுகள்/ குமரிக் கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக உருவாகும் வாய்ப்புள்ளது எனவும், இது இலங்கையின் கிழக்கு கரையோரமாக, வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதி வட மாகாணத்தை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

O/L பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவிக்கு பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் கல்வி சமூகம்

O/L பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவிக்கு பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் கல்வி சமூகம்

தனது முகப்புத்தகத்தில் இன்று (18.02.2026) இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அதில் மேலும், இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 24.02.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் கன மழை 23.02.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

கனமழை கிடைக்கும் வாய்ப்பு

வடக்கு மாகாணத்திலும் நாளை (19.02.2026) மழை சற்று குறைவடைந்தாலும் மீளவும் 20.02.2026 சற்றுக் கனமழை கிடைக்க தொடங்கும். குறிப்பாக 21 மற்றும் 22 ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு: மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு - வெளியாகியுள்ள தகவல் | Low Pressure Area South Bay Of Bengal

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் இம்மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழையாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்களுக்கு பரவலாக கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 21 மற்றும் 22 ம் திகதிகளில் நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அநுர அரசின் நடவடிக்கையால் கொழும்பிலுள்ள உணவகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

அநுர அரசின் நடவடிக்கையால் கொழும்பிலுள்ள உணவகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஆகவே குளங்களின் வான் பாயும் பகுதிகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சாத்தியமான வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது மிக அவசியம் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5

10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US