குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சி செய்தி
குறைந்த வருமானத்தினைக் கொண்ட மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayakka) தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிகரித்துள்ள கொடுப்பனவுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்கள் உள்ளார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும தொகையில் நாங்கள் மாற்றங்களைச் செய்துள்ளோம்.
8500 ரூபா அஸ்வெசும தொகையைப் பெற்றவர்கள் தற்போது 10 ஆயிரம் ரூபாவைப் பெறுவார்கள். 15ஆயிரம் ரூபா அஸ்வெசும தொகையைப் பெற்றவர்கள் 17500 ரூபாவை அஸ்வெசும நிவாரணமாகப் பெறுவார்கள்.
மேலும், அஸ்வெசும தொகை கிடைக்கப்பெறாத 4 இலட்சம் குடும்பங்கள் இன்னும் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும்.
அத்துடன், முதியோருக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், அஸ்வெசும நிவாரணத் தொகை உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
