குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் தொடர் நெருக்கடி
பூச்சியமாகக் காணப்பட்ட சில பொருட்களுக்கான வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றதாகும். இதனால் குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெறுமதி சேர் வரியின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தைப் பெற்றுக்கெள்ள முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு வேலைத்திட்டங்கள் வீழ்ச்சியடையும்.
அவ்வாறான நிலமை ஏற்பட்டால் எமக்கு கை கொடுப்பதற்கு யார் இருக்கின்றனர். 2023ஆம் ஆண்டைப் போன்றே 2024ஆம் ஆண்டும் நெருக்கடி மிக்கதாகவே இருக்கும். பொருளாதார மறுசீரமைப்புக்கள் இன்றி நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற கற்பனைக் கதையைக் கூறுவதற்கு நான் தயாராக இல்லை.
சீனாவின் எக்ஸிம் வங்கி, பரிஸ் கிளப் நாடுகள் மற்றும் இந்தியா என்பவற்றுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான ஆரம்ப இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதன் மூலம் நாணய நிதியத்துடனான செயற்பாட்டின் முதற்படியைக் கடந்துள்ளோம்.
எனினும் அதற்கான ஒப்பந்தம் இதுவரை கையெழுத்திடப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மாத்திரமே வர்த்தகக் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும். பொய் கூறி மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள் இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.
கடந்த ஆண்டு பெறுமதி சேர் வரியின் மூலம் பெற்றுக்கொண்ட வருமானத்தை இந்த ஆண்டு பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
வரி வருமானம் போதுமானதல்ல
பூச்சியமாகக் காணப்பட்ட சில பொருட்களுக்கான வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றதாகும். இதனால் குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
செல்வந்தர்களுக்கான சொத்து வரியை அதிகரித்தால், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். எனினும், இதனையும் சிலர் எதிர்க்கின்றனர். அனைத்து வரிகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
தற்போது நாட்டுக்கு கிடைக்கும் வரி வருமானம் போதுமானதல்ல. மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை இவ்வருடம் சுமார் 60 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.
ஊழல் மோசடிகளைக் குறைத்தால் மின் கட்டணத்தைக் குறைத்து இலாபமீட்டலாம். டொலர் வருமானம் கிடைத்தால் மாத்திரமே முதலீட்டுக்கு இடமளிக்கப்படும் எனக் குறிப்பிடுவது முட்டாள் தனமானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
