குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம்! பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி
அஸ்வசும திட்டத்திற்கான குறைந்த வருமானம் பெறுவோரைத் தெரிவு செய்யும் கணக்கெடுப்பில் குறைபாடு இருப்பின் அதனை நிவர்த்தி செய்து தருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை எந்த வகையிலும் இத்திட்டம் ஒதுக்கி வைக்காது என அவர் கூறினார்.
கணக்கெடுப்பில் குறைபாடுகள்
முன்பை விட அதிக எண்ணிக்கையிலான குறைந்த வருமானம் பெறுவோருக்கு நன்மைகளை வழங்கும் நோக்கில் அஸ்வசும வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அஸ்வசும வேலைத்திட்டத்திற்கு வருமானம் ஈட்டுபவர்களை தெரிவு செய்வதற்கான கணக்கெடுப்பில் குறைபாடுகள் காணப்படுவதாக இன்றைய (23) அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.