ஜூலை முதல் கிடைக்கவுள்ள கொடுப்பனவு! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டங்களில் இடம்பெறாத நபர்கள் அது தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியமென, ஜனாதிபதி செயலணியின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சாகல ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும்
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் திட்டமிட்டபடி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் தகுதியிருந்தும் அந்த திட்டத்தில் உட்படாதவர்கள் தமக்கான நிவாரணம் தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |