இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நடவடிக்கை ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றம் தேசிய கொள்கைகள் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இதனை தெரிவித்துள்ளது.
முதியோர்களுக்கும் இந்த சலுகைகள்
மாற்றுப் பாலினத்தவர்கள், பாதிக்கப்படக் கூடியவர்கள், வறுமையில் உள்ளவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் ஆகிய 4 வகைகளின் கீழ் இந்த நலத்திட்ட உதவி தொகைகளை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் நிதி உதவி பெறும் முதியோர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கவுள்ளது.
இந்த சமூக நலத்திட்டத்திற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3.7 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.