யுத்தம் காரணமாக எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும்:டக்ளஸ்
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் ஒரு தொகுதியை பொது மக்களிடம் கைளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு நன்றி

அரசியல் கட்சியின் தலைவர் என்பதற்கு அப்பால் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் என்ற அடிப்படையில், இந்த உத்தரவாதத்தினை அளிப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான இவ்வாறான நிகழ்வுகளில் அனைவரும் ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதேவேளை எமது மக்களுக்கு
சொந்தமான காணிகளை மீண்டும் கையளிப்பது மாத்திரமன்றி, அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் தீர்வினை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri