எரிபொருள் பிரச்சினையால் மதுவரித் திணைக்களத்திற்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான நட்டம்...!
எரிபொருள் பிரச்சினையால் இலங்கை மதுவரித் திணைக்களத்திற்கு நாளாந்தம் 10 முதல் 15 கோடி ரூபா வருமான இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து வசதியின்மையே இதற்கான பிரதான ஏதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
| வீடுகளில் முடங்கிய மக்கள் - ஊரடங்கு காலப்பகுதி போன்று காட்சியளிக்கும் கொழும்பு |
நட்டம் ஏற்படுவதற்கான காரணம்

மின்சாரத் தடை, பணியாளர்களுக்கு போக்குவரத்து செய்ய முடியாமை, விலை அதிகரிப்பு, நுகர்வு குறைவடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானம்

சுங்கத் திணைக்களம், வருமான வரித் திணைக்களம் என்பனவற்றுக்கு அடுத்தபடியாக இலங்கையில் அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானம் கொண்டு வரும் நிறுவனமாக மதுவரித் திணைக்களம் காணப்படுகின்றது.
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam