கிழக்கில் காணிகளை வழங்கிய அரசாங்கத்திற்கு நட்டம்

in the east
By Independent Writer Feb 12, 2021 07:41 PM GMT
Report

யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்களுக்குப் பின்னரும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் காணியற்று இருக்கின்ற நிலையில், முதலீட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நீண்டகால வரி சலுகையின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டம் - குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் ஊடாக அரசுக்கு கிடைக்க வேண்டிய 348 மில்லியன் ரூபாய் நிதியை செலுத்த அவர்கள் தவறியுள்ளதாக காணி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் எஸ். எம் சந்திரசேன இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குச்சவெலி பிரதேச செயலகம், கும்புருப்பிட்டி கிழக்கு (240 பி) கிராம சேவகர் பிரிவு, புல்மோட்டை - திருகோணமலை பிரதான வீதியில் உள்ள இரக்கண்டி பாலம், சலபே ஆறு பாலம் மற்றும் கடற்கரைக்கும் பிரதான வீதிக்கும் இடையிலான பிரதேசங்களில் அமைந்துள்ள, அரச காணிகளை பயன்படுத்தும் ஏழு நபர்களிடமிருந்து மாத்திரம் அரசாங்கத்திற்கு சுமார் 17 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த நபர்கள் யார் என்பது குறித்த தகவல்களை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.

எவ்வாறெனினும், இலட்சக்கணக்கான நிலமற்ற மக்களுக்கு காணிகள் வழங்கப்படும், அவர்களுக்கு உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படும், மேலும் இந்த வருடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம். சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சரோ அரசாங்கத் தகவல் திணைக்களமோ தகவல் எதனையும் வெளியிடவில்லை.

அரசாங்க புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், உயர் ஸ்தானிகர் மைக்கேல் பெச்லெட், அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த சுமார் 90 சதவீத காணிகள் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

"2009இல் கைப்பற்றப்பட்ட அரச காணிகளில் 89.26 சதவீதமும், தனியார் காணிகளில் 92.22 சதவீதமும் 2019 டிசம்பர் 31ற்குள் மீளப் பெறப்பட்டுள்ளன" என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களை ஏற்க மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவஞானம் ஸ்ரீதரன், உயர் ஸ்தானிகரின் அறிக்கை வெளியாகி ஒரு வருடத்தின் பின்னரும், முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 8,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இதுவரை உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இன்னமும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, இதனால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தார்.

“ஆகவே இவ்வளவு பெரிய அளவில் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத் தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கையை உருவாக்கி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது உயர்ஸ்தானிகருக்கு நியாயமான செயற்பாடாக அமையாது. 2015 இலும் இதுவே நடந்தது. அரசாங்கம் முன்னேறி வருகிறது, முன்னேறுகிறது, முன்னேறுகிறது, எனக் குறிப்பிடப்பட்டாலும், அடைந்த முன்னேற்றம் எதுவுமில்லை.

அரசாங்க காணிகள் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது அல்லது பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பொருத்தமான நபர்களுக்கு விதிமுறைகளின்படி அந்த நிலங்களுக்கான சட்ட ரீதியான உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் ஏனைய காணிகள் விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் யுத்தம் முடிவடைந்து சுமார் 12 வருடங்களுக்குப் பின்னரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 400ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் அகதி முகாம்களில் வசித்து வருவது அண்மையில் தெரியவந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரிய மையங்களில் உள்ள 409 குடும்பங்களில் 233 குடும்பங்கள் காணியுரிமை அற்ற குடும்பங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US