19 அரச நிறுவனங்களுக்கு 4 மாதங்களில் மட்டும் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம்
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மின்சாரசபை உள்ளிட்ட 19 அரச நிறுவனங்களுக்கு இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காலப்பகுதிகளில் அதிகளவான இழப்புகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கே ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டுத்தாபனத்துக்கு 4 ஆயிரத்து 500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக அரச நிறுவனங்கள் அதிகளவு நட்டம் அடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
