அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்திய கப்பல் விபத்து
பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதத்திற்கான காப்பீட்டுத் தொகை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என்றும், வரலாற்றில் ஒரு விபத்துக்காக செலுத்தப்படும் மிகப்பெரிய கடல் காப்பீடு இதுவாகும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய சிங்கப்பூர் சரக்குக் கப்பல் இடிந்து விழுந்ததில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் முற்றாக இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்கள் ஆறு பேரும் பாலத்தன் கட்டுமான பணிகளில் பணிபுரியும் புலம்பெயர் பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த பாலம் மற்றும் அதற்கு காரணமான கப்பலுக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதால், விபத்தின் நிதி இழப்பை ஈடுகட்ட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
15 மில்லியன் டொலர் நஷ்டம்
கடந்த ஆண்டு மட்டும் 80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சரக்கு வர்த்தகம் செய்த இந்தத் துறைமுகம் தேசிய மற்றும் சர்வதேசப் பொருளாதாரத்துக்கு முக்கியமான விநியோகக் கோடு என்று மேரிலாந்து மாகாண ஆளுநர் வெஸ் மூர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாலத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்டு துறைமுகத்திற்கான அணுகு பாதையை திறக்கும் வரை நாளாந்தம் சுமார் 15 மில்லியன் டொலர் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |