நாவலப்பிட்டியில் லொறி விபத்து: சாரதி படுகாயம்
தேயிலை கொழுந்து ஏற்றி சென்ற லொறி ஒன்று கடியலென ஆற்று பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று(23) இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னோக்கி சென்ற லொறியில் திடீரென தடுப்புக்கட்டை(பிரேக்) செயழிழந்ததன் காரணமாக பின்னோக்கி வந்து கொத்மலை நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கடியலென ஆற்றுப்பகுதியில் குடைசாய்ந்துள்ளது.
விபத்தின் பாதிப்புக்கள்
விபத்து ஏற்பட்டபோது சில தேயிலை கொழுந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் சில கொழுந்துகள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
