மண்டபம் வடக்கு கடற்றொழில் துறைமுகத்தில் லொறி ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்து
மண்டபம் வடக்கு கடற்றொழில் துறைமுகத்திற்கு செல்லும் பாலத்தின் ஊடாக லொறி ஒன்று பாலம் இடிந்து வீழ்ந்தலில் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (02) காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
50 ஆண்டு பழமையான பாலம்
இராமநாதபுரம் - மண்டபம் வடக்கு கோயில் வாடி கடற்றொழில் துறைமுகத்திற்கு செல்வதற்காக கடலுக்கு நடுவே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகாலம் கடந்துள்ள நிலையில், பாலம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக பழைய பாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலம் அமைத்து தரும்படி கடற்றொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |