கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து : சாரதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்
தலவாக்கலை - பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று(20.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, லொறியின் சாரதியும், உதவியாளலும் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதி படுகாயம்
பாமஸ்டன் தோட்டத்திலிருந்து ரட்ணகிரி தோட்ட வீதியூடாக தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

எனினும் இன்று(21.05.2026) காலை சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்தின் காரணமாக லொறி பலத்து சேதம் அடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளார்.