களுத்துறையில் லொறி மோதி பலியான சிறுவன்
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து நேற்று (08.11.2025) வெள்ளிக்கிழமை கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியின் குறுக்கே சைக்கிள் ஓட்டிச் சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன், களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்தவர் கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam