கிளிநொச்சியில் திடீர் பழுதால் விபத்துக்குள்ளான கப்ரக வாகனம்
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த விபத்தானது, நேற்று (22.06.2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
வேகமாக பயணித்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது (ஸ்ரேரிங் ரொட் உடைத்ததில்) காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது.
தொலைத்தொடர்பு தூண்கள்
இதன்போது, வாகனம் வீதி அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வலையமைப்பு தூண்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும், இரண்டு தொலைதொடர்பு தூண்கள் சேதமடைந்ததோடு, வலையமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற மின் இணைப்பு வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
