மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் மதிலை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்த லொறி!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நள்ளிரவு வேளையில் மதிலை உடைத்துக்கொண்டு வளவொன்றினுள் லொறி ஒன்று புகுந்துள்ளது.
குறித்த சம்பவம் சனிக்கிழமை இரவு (15.11.2028) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே குருநாகல் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
அந்தப் பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் விபத்து சம்பவித்த சமயம் மருதமுனையைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அத்துடன், வீட்டு மதிலுக்கும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam