படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்காது! இரா- சாணக்கியன்(Video)

Murder Colombo Journalist Shanakiyan
By Independent Writer Jan 08, 2022 09:34 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார்.

அவருக்காகச் சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர், எனவே லசந்த உட்படப் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது கஷ்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று (08) இடம்பெற்றது.


இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பிலே இருக்கும் பல ஊடகங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர்களை அரசு தமது வியாபாரிகளை விட்டு அனைத்தையும் கைப்பற்றும் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து நீங்கள் இவ்வாறான வேலைகளைத் தொடர்ச்சியாக செய்வீர்களானால் உங்களை வேலையிலிருந்து நீக்கவேண்டிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

2022 ம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் அவர்தான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். அவர் 2009 ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த போட்டி ஒன்றைப் பார்த்திருந்தேன் அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சனையும் இல்லை.

ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய இருக்கின்றேன் என்றவர் தான் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்காக வழக்கு பேசிய அலி சப்ரி தான் இந்த நாட்டிலே நீதி அமைச்சராக இருக்கின்றார்.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குப் பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் அப்படியான காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். லசந்த மட்டுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேவேளை பொலிஸாரால் லசந்த கொலை தொடர்பாக வழக்கு தொடரவில்லை. இருந்தபோதும் நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அந்த வழக்கை ஆரம்பித்தாலும் அதைத் திருப்திகரமான முடிவை எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெற முடியவில்லை என்பது கவலையான விடயம்.

எனவே இனிவரும் காலங்களிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் கொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தாலே நீதிமன்றத்தாலே தண்டனை வழங்காவிட்டாலும் இறைவன் தண்டனை வழங்குவான் என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US