கொழும்பு புறநகர் பகுதியில் பல கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 3 கோடியே 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து சி.சி.டிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தலங்கம பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார். அவர் பெலிஹுல் ஓயா பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பெலிஹுல் ஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவரின் வீட்டை அண்மித்த பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடியே 12 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபர் குறித்தான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.