சுவிட்சர்லாந்தில் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் இன்று முதல் இலவசமாக கோவிட் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து மேலும் பலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன்வருவார்கள் என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
என்ற போதும் 16 வயதிற்கு குறைந்தவர்கள், கோவிட் அறிகுறிகள் உடையவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட விரும்புபவர்கள் ஆகியோருக்கு இலவச பரிசோதனை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ற போதும், அவர்களுக்கு கோவிட் சான்றிதழ் வழங்கப்படாது என்பதால், அவர்கள் உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக சுவிஸ் அரசு இலவச கோவிட் பரிசோதனைகளை வழங்கி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.