வவுனியாவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வாகன வரிசை (Photos)
வவுனியாவில் பேருந்துகள் மற்றும் பார ஊர்திகள், மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
வவுனியா மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இவ்வாறு வாகன வரிசை காணப்பட்டது.
இவ்வாறு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையில் நின்ற போதிலும் பெட்ரோல் மாத்திரமே வழங்கப்பட்டது.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இதேவேளை பேருந்து மற்றும் பார ஊர்திகளுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் தங்கள் சேவையில் ஈடுபடமுடியாது உள்ளதாகப் பேருந்து சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.


சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam