சதொச நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஓரளவு நியாய விலையில் சதொச நிலையங்களில் கிடைப்பதனால் மக்கள் சதொச நிலையங்களில் இன்று காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
அரிசி,மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதாலும் தற்போது அரசாங்கம் சலுகை விலையில் அத்தியாவசிய பொதியொன்றினை பெற்றுக்கொடுப்பதனாலும் மக்கள் இவ்வாறு வரிசையில் நின்று பெற்றுக்கொள்வதாக சதொச நிலையங்களின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சகல மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அரசி, மா, சீனி பருப்பு உள்ளிட்ட சில பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, பொகவந்தலாவை உள்ளிட்ட மலையகத்தின் பிரதான
நகரங்களில் அத்தியாவசிய பொருட்களை வர்த்தகர்கள் தாங்கள் பெற்ற
விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும்,இதனால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
